Powered by Blogger.
RSS

அவித்தமுட்டை கிரேவி (மாமியின் சமையல்)

மாமியும் (கணவரின் அம்மா) இப்பலாம் வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஸ்கூல் போக கூடிய தன் பேரபிள்ளைகளுக்கு கொடுத்துவிட நித்தமும் வெரைட்டியாக சமைக்கிறாங்க. சென்னை போயிருக்கும் போது அவர் செய்த சமையலை போட்டோ எடுத்தேன்!  செம டேஸ்ட்டா இருந்துச்சு... உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்....
முட்டை-10
கொத்தமல்லி,புதினா, கறிவேப்பிலை- சிறிதளவு
சின்ன வெங்காயம்-20
தக்காளி-3
இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய்- ஒரு குழிகரண்டி
கடுகு.உளுந்து- சிறிதளவு
உப்பு-தேவைக்கு





முட்டைகளை அவித்து மேல்பகுதியில் கால்பகுதியளவுக்கு மட்டும் கீறிவைக்கவும். இது மசாலா உள்ளே சேர வைக்கும்.


சின்னவெங்காயம் அரைத்துவைக்கவும். இஞ்சிபூண்டு தனியாக அரைத்து வைக்கவும். தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தமல்லிபுதினா ஆய்ந்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து தாளித்து பின்னர் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்க்கவும். அதன் பின் வெங்காய விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் இஞ்சிபூண்டுவிழுது சேர்க்கவும்.




பச்சைவாசனை போனதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.




தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.




அவித்த முட்டைகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை  அடுப்பில் வைத்திருக்கவும்.



விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடலாம். 5 நிமிடங்கள் கழித்து மசாலா ஒரு சேர வந்ததும் இறக்கி பரிமாறவும்.




அவிச்சமுட்டை கிரேவி தயார்.
சாதத்தில் பிரட்டி சாப்பிடவும், சாம்பார்,ரசம், புளிகுழம்பு வகைகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

12 comments:

Radha rani said...

மாமியின் சமையல் சூப்பர் ...எல்லா வகை உணவிற்கும் பொருத்தமாக இருக்கும் போல இருக்கே..செய்து பார்க்கணும் ஆமி..

ஆமினா said...

நல்லா இருந்துச்சு ராதா... நண்டுகுழம்பு வாசனை வந்துச்சு சாப்பிடும் போது :-)

செய்து பாருங்க

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமா இருக்கு... செய்து பார்க்க வேண்டும்... நன்றி சகோதரி...

விச்சு said...

பார்த்தாலே ஸ்ஸ்ஸ் ஆஆஆ.. இன்னைக்கே செஞ்சு பார்த்துடறேன்.

Unknown said...

விதியாசமாக இருக்கு.. செய்துபார்க்கும் ஆவல் வருகிறது ஆமீனா

ஜெய்லானி said...

//நல்லா இருந்துச்சு ராதா... நண்டுகுழம்பு வாசனை வந்துச்சு சாப்பிடும் போது :-)//

பக்கத்து வீட்டுக்கு நாந்தான் நண்டு குழம்பு அனுப்பி இருந்தேன் .ஒரு வேளை அந்த வாசம் வந்திருக்கும் ஹி..ஹி... :-)).

//மாமியும் (கணவரின் அம்மா) இப்பலாம் வித்தியாசமா சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க!//

எதுவும் வித்தியாசமா சமையல் குறிப்பு வேனுமின்னா மாமிகிட்டே கேட்டு சொல்லுங்க . என் கிட்டே நிரைய இருக்கு :-)))))))

குறையொன்றுமில்லை. said...

ஆமிமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ஆமினா said...

முட்டைன்னு தலைப்புல கொடுத்திருக்கேனே மாமி :-)))

குறையொன்றுமில்லை. said...

கூடவே மாமியின் சமையல்னும் போட்டிர்ந்தியே

Mrs.Mano Saminathan said...

நல்லதொரு சமையல் குறிப்பு இது! இந்த முட்டை மசாலா பிரியாணிக்கும் பரோட்டாவிற்கும் நல்ல பக்கத்துணை!!

Asiya Omar said...

அருமையாக இருக்கு ஆமினா..

அஸ்மா said...

ஆஹா... சூப்பர் ஆமி! நாங்க அமுக்கு முட்டை பொரியல் செய்வோம். அது கொஞ்சமா மசாலா பிரட்டியதுபோல் இருக்கும். இதுமாதிரியும் செய்துபார்த்துட வேண்டியதுதான். மாமி வீட்டிலும் மறக்காமல் ஃபோட்டோ எடுத்து வந்து பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி ஆமினா :)

Post a Comment